
“ஏங்க நான் ஊருக்கு போகின்றேன்” என்று என் மனைவி சொன்ன போது நான் ஏதோ திருச்சி ,ஸ்ரீரங்கத்துக்கு போவது போல் ஓக்கே சொல்லி விட்டேன்... ஆனால் இப்போது அவள் இல்லாமல், அவளை சட்டென பார்க்க முடியாமல் மனது தவியாய் தவிக்கின்றது...
பக்கத்தில் இருக்கும் பெங்களூருல் இருக்கும் அவள் அம்மா வீட்டிக்கு போனால் , மனதுக்கு தெரியும் இரண்டுநாளில் வந்து விடுவாள் என்று அப்படியும் எனக்கு போர் அடித்தால் நான் அங்கு போய் விடுவேன்...
ஆனால் அவள் இப்போது போய்இருப்பது அயர்லாந்தில் டூபளின் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை சென்னை ஏர்போர்ட்டில் பிளைட் ஏற்றி விட்டேன்... அவளுக்கு அதுதான் முதல் விமானபயணம்,வெளிநாட்டு பயணம் எல்லாம்... நான் பிளைட் எப்படி இருக்கும் என்று ஆங்கில படங்களில் மட்டுமே பார்த்து இருக்கின்றேன்.. தாம்பரம் நோக்கி போகும் போது தலைக்கு மேல் ரொம்ப சத்தத்துடன் அது இறங்குவதை பார்த்து இருக்கின்றேன்... அவ்வளவே
அவள் ஊர் போய் சேரும் வரை எனக்கு செம டென்ஷன் போங்கள்... எனென்றால் புவியீர்ப்பு திசைக்கு எதிரான பயணம் அல்லவா? அதனால்தான்....
3மாத காலம் அவர்கள் கம்பெனியில் அக்கவுன்ட்ஸ் சம்பந்தமாக அயர்லாந்தில் டிரைனிங்...கடந்த வருடம் அக்கேடாபர் 19ம் தேதிதான் எங்கள் திருமணம் நடந்தது...பத்து வருடம் பார்த்து, ரசித்து, காதல் திருமணம் செய்து கொண்ட பெண்தான்.. இருந்தாலும் இந்த பிரிவு எனை வாட்டுகின்றது....
காரில் வீடு வந்து அழைத்து போய் வீட்டில் விடும் வசதி அவள் அலுவகத்தில் இருந்தாலும், நான் சும்மா இருந்தால் மாலை வேலையில், அவளை அழைக்க அவள் அலுவலகத்துக்கு போய் அவளை அழைத்து வருவேன்....
நல்ல காபி குடிந்து , அதுவும் காலையில் காப்பி குடித்து 5 நாட்கள் ஆகின்றது... கால் வலிக்கின்றது என்று சொன்னால் எந்த நேரமாக இருந்தாலும், சட்டென சுடுதண்ணீர் வைத்து அதில் கொஞ்சம் டெட்டால் ஊற்றி வெது வெதுப்பான நீரில் காலை வைக்க சொல்லி செல்லமாக மிரட்டுபவள்....
நேற்று தனிமையில் தோசை வார்க்கும் போது அவள் ஞாபகம்... என்னை எப்போதும் சமையல் கட்டு பக்கம் விடவே மாட்டாள்... காரணம் காய்கறி அறிந்த அரிவாள் மனை நடுவில் இருந்தால், அதனை எடுத்து ஓரம் வைக்க சொல்லுவேன்... அதனால் என்னை சமையல் அறை பக்கம் விடவே மாட்டாள்....இப்போது அது என்னுடைய ராஜ்யமாக மாறிப்போய் இருக்கின்றது...
நான் எப்போதாவது காபியும், தோசையும் வார்த்து கொடுத்தாலே ஐயம் சோ லக்கி என்று சொல்லுவாள்...
அவள் சுத்த வெஜிட்டேரியன், கொஞ்சம் ஆச்சாரம்.... நான் எதையும் தின்னும் ரகம்.... அங்கு எடுத்து போன உணவு பொருட்கள் தீர்ந்ததும் என்ன செய்வாள் என்ற தெரியவில்லை...
இந்த பெண்கள் ரொம்பவும் மோசம் ஆண்கள்வளரும் போது தாய் பார்த்து பாத்து செய்து அவனை கெடு்க்கின்றாள்... தாரம் அதை விட அதிகமாக கவனித்து அவனை ஹோம் சிக் ஆக்குகின்றார்கள்...
என்ன கொடுமைன்னா அவள் எடு்த்து போன லேப்டாப்ல நெட்கனெக்ஷன் அக்சப்ட் ஆகலை... எடுத்து போன போன் வேறு பிரச்சனை...
அயர்லாந்தில் தமிழ் பதிவர்கள் யாராவது இருக்கின்றீர்களா? அப்படி இருந்தால் எனக்கு தெரியபடுத்துங்கள்...அல்லது அயர்லாந்து டூப்ளின் நகரத்துக்கு பக்கத்தில் இருந்தாலும் ஓகே....கடல் கடந்து எதாவது உதவி என்றால் நாம் எப்படி செய்ய முடியும்...விருப்பம் இருப்பின் சொல்லுங்கள்... அல்லது சென்னையில் இருந்து அயர்லாந்து சென்றாலும் சொல்லுங்கள்.....
என் மனைவிஅயர்லாந்தில் இரவில் 8 மணிக்கு வெயில் அடிக்கின்றதும்மா.... என்று சொல்கினறாள்... என் மனைவி ஊருக்கு போகின்றாள் என்ற உடன் பள்ளியில் 5 மார்க் கொஸ்டினுக்கு வேல்டு மேப் பாத்துவிட்டு பரிட்சைக்கு போவோம்... அதற்க்கு அப்புறம் இப்பதான் வேல்டு மேப் பார்க்கின்றேன்.... அயர்லாந்து எங்கே இருக்கின்றது என்று....
எனது நண்பர் நித்யகுமாரன் இல்லாள் பிரிவு பற்றி எழுதிய கவிதை இங்கே பொறுத்தமாய் இருக்கும் என்று நம்புகின்றேன்....
நீ
தளும்ப தளும்ப தரும்
காபி குவளைகள்
காலியாகவிருக்கின்றன
தளும்புகின்றன...
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
நடுநிசி வந்து
பூட்டிய கதவு திறந்து
அசந்து படுத்தாலும்
என்னோடு சேர்ந்து
உறங்க மறுத்து
உன் ஞாபக அலையடிக்கிறது
மாத காலண்டர்...
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
நீ
திட்டித்திட்டி செய்யாததையெல்லாம்
அனிச்சையாய் செய்கிறேன்...
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
வேண்டுமட்டும் தூங்கலாம்
ஆப்பாயில் சாப்பிடலாம்
10 மணி தாண்டி வீடு வரலாம்
இந்த எந்த சுதந்திரமும் வேண்டாம்
விரைந்து வா....
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
குடிக்க சுடுதண்ணீர் போடுகையிலும்
உள்ளாடை துவைக்கையிலும்
தெரிந்து போகிறது...
என்னை எந்தளவு
கெடுத்து வைத்திருக்கிறாயென்று...
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
நீ
திரும்பிவரும் நாள்வரை
மொத்தமாய் கிழித்தபின்
காலண்டரும் எனைப்பார்த்து
கைகொட்டி நகைக்கிறது....
எனது எல்லா பதிவுகளுக்கும் முதல் வாசகி எனது மனைவிதான், ஆனால் இப்போது மற்றவர்கள் போல அவளும் வாசிக்க வேண்டும்.... என்ன கொடுமை சரவணன் இது...
இந்த பதிவை என் மனைவி அயர்லாந்தில் படிப்பாள் என்று நினைக்கின்றேன் அதற்கு சீக்கரம் நெட் அவள் லேப்டாப்பில் ஒர்க் ஆக வேண்டும்....
ஒரு மாதிரி குழும்பி போய் என்ன எழுதுவதென்று தெரியாமல் எழுதிஇருக்கின்றேன்.. அதுமட்டும் எனக்கு நன்றாக புரிகின்றது...
அன்புடன்
ஜாக்கிசேகர்...
இது இது இதுதான் பாஸ் காதல்.
ReplyDelete[[இந்த பெண்கள் ரொம்பவும் மோசம் வளரும் போது தாய் பார்த்து பாத்து செய்து அவனை கெடு்க்கின்றாள்... தாரம் அதை விட அதிகமாக கவனித்து அவனை ஹோம் சிக் ஆக்குகின்றார்கள்...]]
[[இந்த பெண்கள் ரொம்பவும் மோசம் வளரும் போது தாய் பார்த்து பாத்து செய்து அவனை கெடு்க்கின்றாள்... தாரம் அதை விட அதிகமாக கவனித்து அவனை ஹோம் சிக் ஆக்குகின்றார்கள்...]]
ReplyDeleteம்ம்ம்ம்ம் எல்லா வீட்டிலும் இதே கதை தான் போல.. ;-)
காதல் படுத்தும் பாடு:)
ReplyDeleteஉங்க இல்லறம் எப்பேதும் நல்லறம்தான் பாஸ்.
வாழ்த்துக்கள் ஜாக்கி.
ReplyDeleteபெண்களை வெகுவாக கவரப்போகிறது இந்த பதிவு.
ஜாக்கி இது அவங்க படிக்கும் போது நெகிழந்து போவார்கள். தற்காலிக பிரிவும் சுகம் தானே :)
ReplyDelete//ஒரு மாதிரி குழும்பி போய் என்ன எழுதுவதென்று தெரியாமல் எழுதிஇருக்கின்றேன்.. அதுமட்டம எனக்கு புரிகின்றது...//
ReplyDeleteபிரிவு சில சமயம் நம்மை பைத்தியம் ஆகி விடும், அதும் காதலி பிரிவு ரொம்பவே பாட படுத்திவிடும் ... ஆனாலும் அந்த தனிமைக்கு எவ்வளவு வலிமை என்பது பிரிந்து போனவர் சேரும் போது வெளிப்படும் அன்புக்கு தெரியும் .. இந்த அன்புக்கு ஒரு தொடக்கமே அந்த பிரிவு என்று ...
அய்யா ராசா நானும் இத்தனை காலம் ஒண்ணா இருந்துட்டு இப்ப பிரிஞ்சி வாடி வதங்கி போய் இருக்கேன். நீர் வேறெ எரியற தீயில் எண்ணை வார்க்கறா மாதிரி அதே பிரச்சினையெ எழுதறெயே உம்மை என்ன செய்யலாம்.
ReplyDeleteகவிதைகள் வேறெ இன்னும் கொடுமை படுத்துது.....
பின்குறிப்பு: கவலை வேண்டாம். இது ஒரு தற்காலிக பிரிவு என நினைத்து ஆறுதலடைந்துக்கொள்ளவும்.
அயர்லாந்தில் தமிழ் பதிவர்கள் இருக்கிறார்கள். நான் படிச்சிருக்கேன்.
எப்படியும் தொடர்பு கிடைக்கும்.
செந்தழல் ரவிக்கோ அல்லது லக்கிக்கோ தெரிந்திருக்கலாம்.
அழகான பிரிவுத் துயரை வெளிப்படுத்தும் பதிவு. இன்றைக்கும் அம்மாவின் அரவணைப்பில் வாழும் என்னைப்போன்றவர்களுக்கு சிலவேளைகளில் அம்மாவைப் பிரிந்து வெளியில் சென்றால் என்ன நிலை ஏற்படுமோ அது நிலை உங்களுக்கு.
ReplyDeleteஇணையம் நெட் சாட் வெப் காம் இருக்கும் இந்தக் காலத்தில் நேரம் வேகமாக ஓடிவிடும். அதுவரை உங்கள் பதிவுகள் உங்கள் மனைவிக்கும் உங்களுக்கும் நல்ல பாலமாக அமையட்டும்.
தலைவரே!
ReplyDeleteசூப்பர்ஸ்டார் மாதிரி காதலின் தீபமொன்று பாட்டு பாடிக்கிட்டே பொழைப்பை பாருங்க :-)
நானெல்லாம் ‘பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா!’ ஜனகராஜு மாதிரி!!!
அட! அருமை.
ReplyDeleteபிரிவுத்துயர் பதிவிலேயே தெரியுது ஜாக்கி.
அப்புறம்,
//
அவள் சுத்த நான்வெஜ், கொஞ்சம் ஆச்சாரம்....//
ஏங்க இப்படிப் ப்ளேட்டைத் திருப்பிப்போட்டீங்க!!!!!
அவுங்க சுத்த வெஜ். நீங்க சுத்த நான்வெஜ்.
அவுங்களுக்கு எங்கள் வாழ்த்து(க்)களைச் சொல்லிருங்க.
அதெல்லாம் நெட் கனெக்ஷன் வந்துரும். டோண்ட் ஒர்ரி.
டேக் கேர்.
அண்ணே... அருமையா எழுதி இருக்கீங்க அண்ணே...
ReplyDeleteவாழ்க காதல் :)
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜாக்கி....
ReplyDeleteஉங்க மனைவிக்கு நல்லாவே ஐஸ் வெக்கறீங்க!!!!... (மேடம் இதை எல்லாம் நம்பாதீங்க.....)
பாவம் நீங்கள்
ReplyDeleteதலைவா நீங்க கொடுத்து வச்ச ஆளு... வாழ்க -
ReplyDeleteஆனா என்னப்போல ஆளுங்க இல்லாலின் லீலைகளினால் dowry case ன்னு கோர்ட்டு கேசுன்னு அலையிறோம்...
வாழ்க வளமுடன்
அய்யா காதல் சக்ரவர்த்தியே
ReplyDeleteசீக்கிரம் பிள்ளைகளை பெற்றுகொள்ளுங்க எல்லாம் சரியாகிவிடும். போகிற போக்கை பார்த்தால் உங்க வீட்டு அம்மணி திரும்பி வருவதற்குள், உங்கள் மேனி பசலை படர்ந்து உடல் இளைத்து கை கடிகாரமும் விரல் மோதிரங்களும் தானாக நழுவி கீழே விழுந்து விடும் போல தெரிகிறது.
முன்னெச்சரிகையாக அவைகளை கழட்டி வீட்டில் வைத்துவிடுங்க.
இது தற்காலிகம் தானே ஜாக்கி?
எங்களுக்கெல்லாம் விட்டால் போதும் என்றல்லவா இருக்கும்??!!!
En akkave, ithellam padchi emanthudatha... intha aangale ipadithan, romba mosam...
ReplyDeleteIce panrathu kelvi patruken, adangappa.... ithu bayangaramda sami...
:)
ReplyDeleteஜாக்கி படிச்சவுடனே எனக்கும் நித்யா ஞாபகம்தான் வந்தது..அவரை ஒரு போன் பண்ண சொல்லு..இல்லை நம்பர் கொடு..அப்புறம் நல்லா எழுதியிருக்கீங்க(இன்னும் ஒரு 2/3 வருஷம் கழிச்சு ஊருக்கு போகலைன்னா வருந்தி ஒரு பதிவை எதிர்பார்க்கிறேன்)
ReplyDelete//. நான் பிளைட் எப்படி இருக்கும் என்று ஆங்கில படங்களில் மட்டுமே பார்த்து இருக்கின்றேன்..//
ReplyDeleteதமிழ் படங்களில் !!!
// தாம்பரம் நோக்கி போகும் போது தலைக்கு மேல் ரொம்ப சத்தத்துடன் அது இறங்குவதை பார்த்து இருக்கின்றேன்... அவ்வளவே//
ஹையா நீங்களும் நம்மள மாதிரித்தானா :) :) சூப்பரு...
//
ReplyDeleteஇந்த பெண்கள் ரொம்பவும் மோசம் ஆண்கள்வளரும் போது தாய் பார்த்து பாத்து செய்து அவனை கெடு்க்கின்றாள்... தாரம் அதை விட அதிகமாக கவனித்து அவனை ஹோம் சிக் ஆக்குகின்றார்கள்...
//
சூப்பர் !!
// யுவகிருஷ்ணா said...
ReplyDeleteதலைவரே! நானெல்லாம் ‘பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா!’ ஜனகராஜு மாதிரி///
அடியேனும் அப்படியே...
சும்மா ஒரு கட்டிங் உட்டுட்டு கவுந்தடிச்சு படு மாமே...
ஒரு சீரியஸ் பதிவ ரொம்ப கலாய்க்கிறோமோ? இது முதல் தற்காலிக பிரிவு, அப்படித்தான் இருக்கும் (அப்படித்தான் இருந்தது), அஞ்சு வருஷம் கழிச்சு ”என்னம்மா கம்பெனில Foreign tour இல்லயான்னு” கேப்ப, அதுவும் இல்லன்னா - அம்மா வீட்டுக்குப் போயி ரொம்ப நாளாச்சே, பத்து நாள் போயிட்டு வரியான்னு கேப்ப, அந்த நாளும் வரும்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
bostonsriram.blogspot.com
திருமணத்திற்கு பின்(னரும்) காதலிக்கிறீர்கள் என்பது தெளிவாக தெரிகிறது
ReplyDeleteவாழ்த்துக்கள் !!
உங்கள் மனைவி கொடுத்து வைத்தவர்
//சூப்பர்ஸ்டார் மாதிரி காதலின் தீபமொன்று பாட்டு பாடிக்கிட்டே பொழைப்பை பாருங்க :-)//
ReplyDeleteபதிவிற்கு சம்மந்தமில்லாத மறுமொழி
--
ரஜினி கமல் அளவு பெரிய நடிகர் இல்லை என்றாலும், அவருக்கு நடிக்கத்தெரியாது என்று கூறுபவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய பாடல் அது :) :)
என்ன தல, இன்னைக்கு சொந்த படம் விமர்சனமா? ஆர்ட் பிலிம் எபெக்ட் கொடுகிரீகளே?அதெல்லாம் தங்கச்சி சமத்தா இருந்துக்கும், நீர் ஸ்டெடியா இருந்தா தேவல.சரியா?சரி மேட்டருக்கு வர்றேன், அந்த வேர்ல்ட் மேப் மேட்டெர் அப்புறம்,அந்த கவிதை ரியலி குட்.
ReplyDeleteஉங்களோட இந்த பதிவைப் பார்த்து ஒன்னு சகோதரி 3 மாசத்துக்கு முன்னாடியே வந்துருவாங்க. இல்லைன்னா நீங்க அவங்க பின்னாடியே போயிடுவீங்க போல இருக்கு... :))
ReplyDeleteரொம்ப கஷ்டம்தான் தல...
என்னோட பிரிவு துயர கவிதைகள்.
தூரமே காதலைப் பெருக்கும்...
http://rajasabai.blogspot.com/2009/08/blog-post_20.html.
நிச்சயம் பதிவிற்கு போய் படிக்க உங்களுக்கு நேரம் இருக்காது. இங்கேயே படிச்சிடுங்க.....
தூரமே
காதலைப்
பெருக்கும் !
என் அன்பே !!
இந்த
உண்மையை
இன்னும்
எத்தனை
நாள்தான்
என் மனம்
பொறுக்கும் !!!
----------------
காலையிலும்
மாலையிலும்
மற்றும்
மதியத்திலும்
ஏதாவது
எழுதிக்கொண்டே
இருக்கிறேன்.
இரவில்
என் கனவில்
நீ
வரும்பொழுது
எப்படியெல்லாம்
பேசவேண்டும்
என்பதற்காக..
-----------------
பிரிந்திருக்கும் போது
எழுதிய
கவிதைகளையெல்லாம்
நாம்
நெருங்கியிருக்கும் போது
சொல்ல
மறந்து விடுகிறேன்.
இது மாதிரிதான் நான் வெளிநாடு போகும்போது நிறைய மிஸ் செய்தேன்..
ReplyDeletehey dear
ReplyDeleteread with tears...
ur wife
(sorry no tamil fonts thats y in english)
ஐயையோ சுதா வந்து படிப்பாங்கன்னு தெரிஞ்சிருந்தா நல்ல புள்ளையா கருத்து சொல்லியிருப்பேனே..
ReplyDeleteநல்ல வேளை, நீ நேத்து குவாட்டர் தனியா அடிச்சத என் கிட்ட சொன்னத நான் சொல்லவே இல்ல
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
தலிவரே.....நீங்க மெட்ராஸ் ஏற்போர்ட்ல ஐயா என் பொண்டாட்டி வெளிநாடு போய்டானு கத்திக்கிட்டு ஓடி வந்தத நான் தானே பாத்தேன்..........இப்ப இங்க வந்து டபைக்குறது ரொம்ப ஓவர்.......
ReplyDeleteஅருமையா எழுதி இருக்கீங்க
ReplyDeleteஇது இது இதுதான் பாஸ் காதல்.
ReplyDelete[[இந்த பெண்கள் ரொம்பவும் மோசம் வளரும் போது தாய் பார்த்து பாத்து செய்து அவனை கெடு்க்கின்றாள்... தாரம் அதை விட அதிகமாக கவனித்து அவனை ஹோம் சிக் ஆக்குகின்றார்கள்...]]---நன்றி ஜமால் உணர்வை புரிந்து கொண்டமைக்கு
[[இந்த பெண்கள் ரொம்பவும் மோசம் வளரும் போது தாய் பார்த்து பாத்து செய்து அவனை கெடு்க்கின்றாள்... தாரம் அதை விட அதிகமாக கவனித்து அவனை ஹோம் சிக் ஆக்குகின்றார்கள்...]]
ReplyDeleteம்ம்ம்ம்ம் எல்லா வீட்டிலும் இதே கதை தான் போல.. ;-)// அப்படித்தான் போல
காதல் படுத்தும் பாடு:)
ReplyDeleteஉங்க இல்லறம் எப்பேதும் நல்லறம்தான் பாஸ்.//
நன்றி அஜீத் உங்க வாழ்த்துக்கு...
வாழ்த்துக்கள் ஜாக்கி.
ReplyDeleteபெண்களை வெகுவாக கவரப்போகிறது இந்த பதிவு.//
நன்றி செந்தழவ் ரவி.. வருகைக்கு
ஜாக்கி இது அவங்க படிக்கும் போது நெகிழந்து போவார்கள். தற்காலிக பிரிவும் சுகம் தானே :)//
ReplyDeleteஉன்மைதான் ஆதவன்.. அவுங்களும் படிச்சிட்டு நெகிழ்ந்து பதில் பின்னுட்டம் போட்டு இருக்காங்க...
//ஒரு மாதிரி குழும்பி போய் என்ன எழுதுவதென்று தெரியாமல் எழுதிஇருக்கின்றேன்.. அதுமட்டம எனக்கு புரிகின்றது...//
ReplyDeleteபிரிவு சில சமயம் நம்மை பைத்தியம் ஆகி விடும், அதும் காதலி பிரிவு ரொம்பவே பாட படுத்திவிடும் ... ஆனாலும் அந்த தனிமைக்கு எவ்வளவு வலிமை என்பது பிரிந்து போனவர் சேரும் போது வெளிப்படும் அன்புக்கு தெரியும் .. இந்த அன்புக்கு ஒரு தொடக்கமே அந்த பிரிவு என்று ...//
நன்றி ராஜராஜன்
நடலலா எழுதி இருக்கிங்க....
அய்யா ராசா நானும் இத்தனை காலம் ஒண்ணா இருந்துட்டு இப்ப பிரிஞ்சி வாடி வதங்கி போய் இருக்கேன். நீர் வேறெ எரியற தீயில் எண்ணை வார்க்கறா மாதிரி அதே பிரச்சினையெ எழுதறெயே உம்மை என்ன செய்யலாம்.
ReplyDeleteகவிதைகள் வேறெ இன்னும் கொடுமை படுத்துது.....
பின்குறிப்பு: கவலை வேண்டாம். இது ஒரு தற்காலிக பிரிவு என நினைத்து ஆறுதலடைந்துக்கொள்ளவும்.
சேம் பிளட்....ராஜா
இணையம் நெட் சாட் வெப் காம் இருக்கும் இந்தக் காலத்தில் நேரம் வேகமாக ஓடிவிடும். அதுவரை உங்கள் பதிவுகள் உங்கள் மனைவிக்கும் உங்களுக்கும் நல்ல பாலமாக அமையட்டு//
ReplyDeleteநன்றி வந்திய தேவன்
தலைவரே!
ReplyDeleteசூப்பர்ஸ்டார் மாதிரி காதலின் தீபமொன்று பாட்டு பாடிக்கிட்டே பொழைப்பை பாருங்க :-)
நானெல்லாம் ‘பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா!’ ஜனகராஜு மாதிரி!!!//
நன்றி லக்கி எப்பவும் அது போல கத்த கூடாதுன்னு ஆண்டவனை வேண்டிக்கி்றேன்..
அட! அருமை.
ReplyDeleteபிரிவுத்துயர் பதிவிலேயே தெரியுது ஜாக்கி.
அப்புறம்,
நன்றி டீச்சர் கண்டிப்பா சொல்லிடுறேன்
நன்றி சூரியன் , மற்றும் யோ வாய்ஸ்
ReplyDeleteஅண்ணே... அருமையா எழுதி இருக்கீங்க அண்ணே..//
ReplyDeleteநன்றி நைனா...
வாழ்த்துக்கள் ஜாக்கி....
ReplyDeleteஉங்க மனைவிக்கு நல்லாவே ஐஸ் வெக்கறீங்க!!!!... (மேடம் இதை எல்லாம் நம்பாதீங்க.....)//
நன்றி ராஜா.. இதையேதான் என் மனைவியின் தம்பிகளும் சொல்லிகின்றார்கள்...
தலைவா நீங்க கொடுத்து வச்ச ஆளு... வாழ்க -
ReplyDeleteஆனா என்னப்போல ஆளுங்க இல்லாலின் லீலைகளினால் dowry case ன்னு கோர்ட்டு கேசுன்னு அலையிறோம்...
வாழ்க வளமுடன்//
நன்றி தமிழ் சரவணன்
அய்யா காதல் சக்ரவர்த்தியே
ReplyDeleteசீக்கிரம் பிள்ளைகளை பெற்றுகொள்ளுங்க எல்லாம் சரியாகிவிடும். போகிற போக்கை பார்த்தால் உங்க வீட்டு அம்மணி திரும்பி வருவதற்குள், உங்கள் மேனி பசலை படர்ந்து உடல் இளைத்து கை கடிகாரமும் விரல் மோதிரங்களும் தானாக நழுவி கீழே விழுந்து விடும் போல தெரிகிறது.
முன்னெச்சரிகையாக அவைகளை கழட்டி வீட்டில் வைத்துவிடுங்க.
இது தற்காலிகம் தானே ஜாக்கி?
எங்களுக்கெல்லாம் விட்டால் போதும் என்றல்லவா இருக்கும்??!!!//
ஒரு வேளை இது முதல் பயணம் அப்படிக்றதால இப்படி இருக்குதோ என்னவோ???, நன்றி மாணிக்கம்
En akkave, ithellam padchi emanthudatha... intha aangale ipadithan, romba mosam...
ReplyDeleteIce panrathu kelvi patruken, adangappa.... ithu bayangaramda sami...// அடப்பாவி மொக்க நண்பா....
நன்றி டிவி ராதாகிருஷ்னன் மற்றும் ரெட் மகி... இருவருக்கும் மிக்க நன்றி
ReplyDeleteஜாக்கி படிச்சவுடனே எனக்கும் நித்யா ஞாபகம்தான் வந்தது..அவரை ஒரு போன் பண்ண சொல்லு..இல்லை நம்பர் கொடு..அப்புறம் நல்லா எழுதியிருக்கீங்க(இன்னும் ஒரு 2/3 வருஷம் கழிச்சு ஊருக்கு போகலைன்னா வருந்தி ஒரு பதிவை எதிர்பார்க்கிறேன்)///
ReplyDeleteசரி தண்டோரா அப்படியே செய்யறேன்...
//. நான் பிளைட் எப்படி இருக்கும் என்று ஆங்கில படங்களில் மட்டுமே பார்த்து இருக்கின்றேன்..//
ReplyDeleteதமிழ் படங்களில் !!!
// தாம்பரம் நோக்கி போகும் போது தலைக்கு மேல் ரொம்ப சத்தத்துடன் அது இறங்குவதை பார்த்து இருக்கின்றேன்... அவ்வளவே//
ஹையா நீங்களும் நம்மள மாதிரித்தானா :) :) சூப்பரு...//
நன்றி டாக்டர்
ஒரு பாஸ்போர்ட் வாங்கி வச்சு கடைசி வரைக்கும் அதுல எந்த சீலையும் குத்தல...
//
ReplyDeleteஇந்த பெண்கள் ரொம்பவும் மோசம் ஆண்கள்வளரும் போது தாய் பார்த்து பாத்து செய்து அவனை கெடு்க்கின்றாள்... தாரம் அதை விட அதிகமாக கவனித்து அவனை ஹோம் சிக் ஆக்குகின்றார்கள்...
//
சூப்பர் !!எல்லா இடத்திலயும் சேம் பிளட்தான் போல இருக்கு..
/ யுவகிருஷ்ணா said...
ReplyDeleteதலைவரே! நானெல்லாம் ‘பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா!’ ஜனகராஜு மாதிரி///
அடியேனும் அப்படியே...
சும்மா ஒரு கட்டிங் உட்டுட்டு கவுந்தடிச்சு படு மாமே...
ஒரு சீரியஸ் பதிவ ரொம்ப கலாய்க்கிறோமோ? இது முதல் தற்காலிக பிரிவு, அப்படித்தான் இருக்கும் (அப்படித்தான் இருந்தது), அஞ்சு வருஷம் கழிச்சு ”என்னம்மா கம்பெனில Foreign tour இல்லயான்னு” கேப்ப, அதுவும் இல்லன்னா - அம்மா வீட்டுக்குப் போயி ரொம்ப நாளாச்சே, பத்து நாள் போயிட்டு வரியான்னு கேப்ப, அந்த நாளும் வரும்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்///
யோவ் ஸ்ரீ பின்னுட்டம் போட்ட பலரும் அந்தநாள் வரும்னு சொல்லி ஏன்யா பீதியை கிளப்பி வக்கிறீங்க...
திருமணத்திற்கு பின்(னரும்) காதலிக்கிறீர்கள் என்பது தெளிவாக தெரிகிறது
ReplyDeleteவாழ்த்துக்கள் !!
உங்கள் மனைவி கொடுத்து வைத்தவர்//
நன்றி புருனோ... மிக்க நன்றி
//சூப்பர்ஸ்டார் மாதிரி காதலின் தீபமொன்று பாட்டு பாடிக்கிட்டே பொழைப்பை பாருங்க :-)//
ReplyDeleteபதிவிற்கு சம்மந்தமில்லாத மறுமொழி
--
ரஜினி கமல் அளவு பெரிய நடிகர் இல்லை என்றாலும், அவருக்கு நடிக்கத்தெரியாது என்று கூறுபவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய பாடல் அது :) :)//
நல்ல நடிகர்தான் டாக்டர் நாம்தான் அவரை குறுகிய வட்டத்துக்குள் சுற்றவிட்டு விட்டோம்
என்ன தல, இன்னைக்கு சொந்த படம் விமர்சனமா? ஆர்ட் பிலிம் எபெக்ட் கொடுகிரீகளே?அதெல்லாம் தங்கச்சி சமத்தா இருந்துக்கும், நீர் ஸ்டெடியா இருந்தா தேவல.சரியா?சரி மேட்டருக்கு வர்றேன், அந்த வேர்ல்ட் மேப் மேட்டெர் அப்புறம்,அந்த கவிதை ரியலி குட்.//
ReplyDeleteநன்றி வாத்தியாரே.. மிக்க நன்றி
பிரிந்திருக்கும் போது
ReplyDeleteஎழுதிய
கவிதைகளையெல்லாம்
நாம்
நெருங்கியிருக்கும் போது
சொல்ல
மறந்து விடுகிறேன்.//
நன்றி துபாய் ராஜா எவ்வளவோ பேச எண்ணி தொண்டைவரை வார்த்தை வராமல் தவித்து இருக்கின்றேன்.. கவிதை நனறாக இருந்தது...
இது மாதிரிதான் நான் வெளிநாடு போகும்போது நிறைய மிஸ் செய்தேன்..//
ReplyDeleteநன்றி பாபு நடராஜன்
hey dear
ReplyDeleteread with tears...
ur wife
(sorry no tamil fonts thats y in english)//
அன்பிற்க்கு இனியவளுக்கு,
நீ கூட என் பதிவை படித்து பின்னுட்ம் இருவாய் என்பதை கனவிலும் நினைத்து பார்த்தில்லை...
படுக்கையில் , பாத்ரூமில் டவல் மறக்கையில், உடை உடுத்தகையில், வண்டியில் நான் மட்டும் தனியாக போகையில், என்று நிறைய மிஸ் செய்கின்றேன்...
ஹாட் ஸ்பைஸ் நீ ஊருக்கு போனதில் இருந்து ஒரு முறை கூட போகவில்லை... போனால் உன் நினைவு வரும்...
சார் மேடம் வரலையான்னு சர்வர் கேட்பான்... அதனால் போகவில்லை..
உனக்கு ஒன்று தெரியுமா? வண்டியில் போட்ட பெட்ரோல் அப்படியே இருக்கின்றது...
கண்களில் நீர் வேண்டாம்... மாதத்திற்க்கு ஒரு முறை நீ எதாவது செய்து விட்டு என்னிடம் திட்ட வாங்குவாயே.. அப்போது சேர்த்து வைத்து அழுதுக்கொள்..
அன்புடன்
உனது எல்லாம்...
தனசேகரன் என்கின்ற ஜாக்கிசேகர்
குறிப்பு...
தமிழ் பான்ட் இருந்தா மட்டும் தமிழ் அடிப்பியா நீ...????
இந்த முழு post-ம் ஒரு கவிதை..
ReplyDeleteஅன்பின் ஜாக்கி,
ReplyDeleteதனிமை மிகவும் கொடுமையாக இருந்தால் அவசியம் பெங்களுர் வாங்க...
அன்புடன்
அரவிந்தன்
பெங்களுர்
This comment has been removed by the author.
ReplyDelete/
ReplyDeleteவேண்டுமட்டும் தூங்கலாம்
ஆப்பாயில் சாப்பிடலாம்
10 மணி தாண்டி வீடு வரலாம்
இந்த எந்த சுதந்திரமும் வேண்டாம்
விரைந்து வா....
/
சூப்பர்!
ஜாக்கி!
ஒரு சிரமமும் இருக்காது நல்ல வெஜிடேரியன் சாப்பாடே அவங்களுக்கு கிடைக்கும். சீக்கிரம் வந்திடுவாங்க.
:)))
/
ReplyDeleteகக்கு - மாணிக்கம் said...
அய்யா காதல் சக்ரவர்த்தியே
சீக்கிரம் பிள்ளைகளை பெற்றுகொள்ளுங்க எல்லாம் சரியாகிவிடும். போகிற போக்கை பார்த்தால் உங்க வீட்டு அம்மணி திரும்பி வருவதற்குள், உங்கள் மேனி பசலை படர்ந்து உடல் இளைத்து கை கடிகாரமும் விரல் மோதிரங்களும் தானாக நழுவி கீழே விழுந்து விடும் போல தெரிகிறது.
முன்னெச்சரிகையாக அவைகளை கழட்டி வீட்டில் வைத்துவிடுங்க.
/
:))))))))))
ROTFL
/
ReplyDeletesudha said...
hey dear
read with tears...
ur wife
/
nice!
ஜாக்கி சந்தோஷமா??
"நேற்று தனிமையில் தோசை வார்க்கும் போது அவள் ஞாபகம்... என்னை எப்போதும் சமையல் கட்டு பக்கம் விடவே மாட்டாள்... காரணம் காய்கறி அறிந்த அரிவாள் மனை நடுவில் இருந்தால், அதனை எடுத்து ஓரம் வைக்க சொல்லுவேன்... அதனால் என்னை சமையல் அறை பக்கம் விடவே மாட்டாள்....இப்போது அது என்னுடைய ராஜ்யமாக மாறிப்போய் இருக்கின்றது" Nice.
ReplyDeleteஅடேங்கப்பா..
ReplyDeleteஎல்லாருக்கும் ரொம்பத்தான் சோகமா இருக்கு போலிருக்கு..!
65 கமெண்ட்ஸா..?
ஜாக்கி.. பேச்சிலர் லைஃபை கொஞ்சம் என்ஜாய் பண்ணு சாமி..!
hi all
ReplyDeleteThanks a lot for everyone, u guys are showing a real care on him and the way you guys console him was really touching.
Now i have got a new strength that some one will be taking care of him.
As bruno sai "I AM REALLY LUCKY TO HAVE HIM"
Dubai sekar ur kavidhaigal was really super
SORRY I AM NOT VERY GOOD IN TAMIL TYPING AND I DONT KNOW HOW TO TYPE EVERYONE'S NAME THAT'S Y A SPECIAL THANKS TO EVERYONE (WITHOUT NAMES :-( )
And a very special thanks to misak who is in ireland, after seeing the blog he has mailed jackie and given his number
who lended his helping hands to us.. thanks misak
mangalore siva i am cooking here so no problem :-)
And again thanks for everyone
sudha s